திருச்சி மாவட்ட பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசு : கலெக்டர் கு.ராசாமணி வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      திருச்சி
Trichy

 

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 2017-2018ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி. பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

 பாராட்டு

 அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் துவக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தங்களது உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணரும் வகையில் 2017-18ஆம் ஆண்டிற்கான பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் சுத்தம் சுகாதாரம் சார்ந்து பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டது.

மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற 15 மாணவ, மாணவியர்களுக்கும், செயல்திட்ட வழிக்கற்றல் மற்றும் போட்டிகளில் மாவட்ட அளிவல் பெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 21 நபர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் கல்வி இயக்க உதவித்திட்ட அலுவலர் க.முத்துச்செல்வன் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து