முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடந்த மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில் காவல் ஆணையாளர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      சென்னை
Image Unavailable

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று (08.03.2018) காலை 10.30 மணி அளவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பான முன்னேற்றம்

 இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன், .கா.ப அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் கூடுதல் ஆணையர்கள் எஸ்.என்.சேஷசாயி, .கா.(தலைமையிடம்), எச்.எம்.ஜெயராம், (வடக்கு), எம்.சி.சாரங்கன், (தெற்கு), எம்.டி.கணேசமூர்த்தி, (மத்தியகுற்றப்பிரிவு), இணை ஆணையர்கள் ஏ.ஜி.பாபு, (தலைமையிடம்), திருமதி.சி.மகேஷ்வரி, .கா.(தெற்கு மண்டலம்) துணை ஆணையர்கள் திருமதி.பி.விஜயகுமாரி (காவல் கட்டுப்பாட்டு அறை) எஸ்.ஆர்.செந்தில்குமார், (மத்தியகுற்றப்பிரிவு) ஆர்.திருநாவுக்கரசு, (நுண்ணறிவுப்பிரிவு) திருமதி.எஸ்.மல்லிகா, (மத்தியகுற்றப்பிரிவு) ..ஜெயலட்சுமி (நிர்வாகம்), திருமதி.எஸ்.விமலா, (நுண்ணறிவுப்பிரிவு) திருமதி.டி.சத்யப்ரியா (வடக்கு போக்குவரத்து), ஷியாமளாதேவி, (புளியந்தோப்பு துணை ஆணையாளர்) பெண் ஆய்வாளர்கள், பெண் உதவி ஆய்வாளர்கள், பெண் காவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் என மொத்தம் 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அனைத்து பெண் காவல் ஆளிநர்களுக்கும், அமைச்சுப்பணியாளர்களுக்கும், இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் காவல் அதிகாரிகள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஆற்றிய சிறப்புரையில் பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பணிபுரிந்து சிறப்பான முன்னேற்றம் அடைந்து வருவது பெருமையளிப்பதாக கூறினார். அதனை தொடர்ந்து பெண்கள் முன்னேற்றத்திற்கு அனைவரும் பாடுபடுவோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக மாலை சுமார் 4.00 மணியளவில் எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் தின சிறப்பு விழாவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன், .கா.ப மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 500 ஆயுதப்படைபெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து