தருமபுரி மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      தர்மபுரி
2

தருமபுரி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்ட நல விடுதிகளில் தங்கி பயிலும் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் கல்லூரிப் படிப்பு பயிலும் மாணவமாணவியர்களுக்கு வாழ்க்கை வழிக்காட்டி நிகழ்ச்சி (மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்துடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினரால் ஜெயம் பொறியியல் கல்லூரி வளாகத்திலும்; அதியமான் கோட்டதிலும் நடைப்பெற்றது.

 

 

வாழ்க்கை வழிகாட்டி

இந்நிகழ்ச்சியின் மூலமாக விடுதி மாணவமாணவியர்கள் போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகளுக்கு எவ்வாறு தயார் படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், எந்தெந்த துறையில் எவ்விதமான பணிகள் உள்ளன என்பதனையும் அப்பணிகளுக்கு எவ்வாறு விண்ணப்பித்து தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் உதவி இயக்குநர் ம.மகேஷ்வரி, சமூக நலத்துறை அலுவலர் எஸ்.ரேவதி மற்றும் தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜி.அமிர்பாஷா மற்றும் விடுதி காப்பாளர்காப்பாளிகளுடன் 500க்கும் மேற்பட்ட விடுதி மாணவஃமாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து