முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சக மாணவனால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அர்ஜூனிடம் கலெக்டர் நேரில் ஆறுதல்

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      மதுரை
Image Unavailable

மதுரை,-முன்விரோதம் காரணமாக சகமாணவர்களால் தாக்கப்பட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அர்ஜுன் என்ற மாணவனை மாவட்ட கலெக்டர் வீர ராகவ ராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரில் வசித்து வரும் மாயக்காளை என்பவரின் மகன் அர்ஜுன் திருவாதவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று காலை 8 மணியளவில் பொதுத்தேர்வு எழுத வந்த அந்த மாணவன் பள்ளி வளாகத்தில் சகமாணவர்களால் தாக்கப்பட்டு காயமடைந்தான். தாக்குதலில் காயமடைந்த அம்மாணவன் அர்ஜூனுக்கு மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இதனை அறிந்த மாவட்ட கலெக்டர் வீர ராகவ ராவ் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் அர்ஜுனை சந்தித்து பின்னர் மாணவனது பெற்றோரிடம் ஆறுதல் கூறினார்.  மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை முதல்வரிடம் மாணவனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். 
 இது குறித்து கலெக்டர் கூறுகையில், மாணவனுக்கு அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சையின் காரணமாக நலமுடன் உள்ளார். மேலும் இத்தாக்குதல் குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் மருதுபாண்டியன் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் அப்போது உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து