முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி மாநிலங்களவை தேர்தலில் மாயாவதி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு

ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : உத்தரபிரதேச மாநிலங்களவை தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு காங்கிரசும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதற்கு முன் அக்கட்சிக்கு அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தது.

உத்திரபிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற மாநிலங்களவையின் 10 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில், பா.ஜ.கவிற்கு 8, சமாஜ்வாடிக்கு ஒரு இடமும் கிடைக்கும். மீதம் உள்ள மற்றொரு இடத்தில் கூடுதலான எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்தால் அந்த இடம் மாயாவதி கட்சிக்கு கிடைக்கும்.

இது குறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவர் அஜய்குமார் லாலு கூறுகையில், எங்கள் எம்.எல்.ஏக்கள் 7 பேரின் வாக்குகள் மாநிலங்களவை தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜுக்கு அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து