முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அல் கொய்தா அமைப்புக்கு ஆதரவு: அமெரிக்கருக்கு 45 வருட சிறை தண்டனை

புதன்கிழமை, 14 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அல் கொய்தா தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட அமெரிக்க குடிமகனுக்கு 45 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றச்சாட்டு

அமெரிக்காவில் வசித்து வந்தவர் முஹானத் மகமூத் அல் பரேக் (வயது 32).  இவர் கனடா நாட்டின் மனிடோபா பல்கலை கழகத்தில் படித்தவர்.  உலகெங்கிலும் உள்ள அமெரிக்க படைகளுக்கு எதிராக போரிடும் நோக்கோடு கனடா நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றார் என இவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது.

சக்தி வாய்ந்த குண்டு...

இது கடந்த 2007ம் ஆண்டு நடந்த வழக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்டது.  இதற்காக அல் கொய்தா இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்ட அவர், பாகிஸ்தானின் பழங்குடியின பகுதிகளில் அந்த அமைப்பில் பயிற்சி பெற்றார். கடந்த 2009ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அமைந்த அமெரிக்க ராணுவம் மீது சக்தி வாய்ந்த குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட திட்டங்களுடன் அமெரிக்கர்களை கொல்வதற்காக திட்டம் தீட்டியதிலும் இவர் முக்கிய பங்கு வகித்தது தெரிய வந்துள்ளது.

வெடிகுண்டு தாக்குதல்

இதன் மீது நடந்த வழக்கு விசாரணையில் அமெரிக்க வழக்கறிஞர் ரிச்சர்டு, அமெரிக்க ராணுவ வீரர்களை வெடிகுண்டு தாக்குதலால் கொல்ல முயற்சித்தவர் அமெரிக்க குடிமகனான பரேக் என தெரிய வந்துள்ளது.  நமது நாடு மற்றும் ராணுவ படைகளுக்கு தீங்கு வரவழைக்கும் எவரையும், எங்களது அதிகாரத்திற்கு உட்பட்டு சட்டத்தின் முன் கொண்டு வருவதற்காக அனைத்தும் செய்திடுவோம் என்பது இதனால் எடுத்து காட்டப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார். உலகளவிலான தீவிரவாத அமைப்பு அல் கொய்தாவிற்கு ஆதரவு வழங்கிய மற்றும் அமெரிக்கர்களை கொல்ல திட்டம் தீட்டிய குற்றச்சாட்டிற்காக பரேக்கிற்கு 45 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து