ரூ.2 ஆயிரம் நோட்டு அச்சடிப்பதை நிறுத்த மாட்டோம்

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      வர்த்தகம்
uncounted 2000 rs(N)

பாராளுமன்றத்தின் மக்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்து கூறியதாவது., புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதை நிறுத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. மேலும், இந்தியாவின் கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஷ்வர் உள்ளிட்ட ஐந்து முக்கிய நகரங்களில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுக்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்மோம் என தெரிவித்துள்ளார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், புதிதாக அச்சிடப்படும் 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் அளவுகளில் வித்தியாசம் உள்ளது. எனவே, அவற்றை எளிதில் அடையாளம் காண முடியும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து