முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: ஒசூர் அருகே கோயில் திருவிழாவில் தலைமேல் தேங்காய் உடைத்து நேர்த்திகடன்

சனிக்கிழமை, 17 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

ஒசூர் அருகே கோயில் திருவிழாவில் தலைமேல் தேங்காய் உடைத்து பக்தர்கள் விநோத நேர்த்திகடன் : ஆயிரக்கணக்கான கிராமமக்கள் சுவாமி தரிசனம் ஒசூர் அருகே சென்னப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலைமேல் தேங்காய்கள் உடைத்து விநோத நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த திருவிழாவில் 20 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராமமக்கள் கலந்து கொண்டனர். ஒசூர் அருகேயுள்ள சென்னப்பள்ளி கிராமத்தில் பழமைவாய்ந்த கரகசாக்கியம்மா, அமரசங்கர ஈஸ்வரன் மற்றும் நவக்கிரக சுவாமிகளின் கோயில் உள்ளது. இந்த கோயில் தற்போது புரணமைக்கப்பட்டு மண்டல பூஜைகள் மற்றும் திருவிழா நடைபெற்று வருகிறது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோயிலில் திருவிழாவை முன்னிட்டு தலைமேல் தேங்காய்கள் உடைக்கும் விநோத வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது தலைமேல் தேங்காய்களை உடைத்து கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த திருவிழாவில் சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சென்னப்பள்ளி, சுண்டகிரி, கொல்லப்பள்ளி, அலகுபாவி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான கிராமமக்கள் இந்த திரவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து