முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேஸ்புக்கில் அமைச்சர் செய்த பதிவால் கவிழும் அபாயத்தில் நார்வே அரசு !

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

ஆஸ்லோ : நார்வே நாட்டில் எதிர்க்கட்சி குறித்து பேஸ்புக்கில் பெண் அமைச்சர் கருத்து பதிவு செய்திருந்த நிலையில் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான நார்வேயில் பிரதமர் எர்னா சொல்பெர்க் தலைமையில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் ஆட்சி நடக்கிறது. தற்போது இது மைனாரிட்டி நிலையில் உள்ளது.

சர்ச்சைக்குரிய பதிவு

இந்த நிலையில் அரசியல் அங்கம் வகிக்கும் நீதித்துறை பெண் அமைச்சர் சில்வி லிஸ்தாக் பேஸ்புக் சமூக வலைதளத்தில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். அதில் 2011-ம் ஆண்டில் தொழிலாளர் கட்சியின் ஆன்டர்ஸ் பெக்ரிங் பிரிவிக் தலைமையில் இருந்த ஆட்சி தீவிரவாதிகள் மீதான தாக்குதல் என்ற பெயரால் இளைஞர்கள் முகாமின் மீது தாக்குதல் நடத்தியது என தெரிவித்து இருந்தார். இது தொழிலாளர் கட்சிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து அமைச்சர் சில்வி லிஸ்தாக் ‘பேஸ்புக்‘கில் பதிவு செய்திருந்த தனது கருத்தை நீக்கிவிட்டார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்

இருந்தும் தொழிலாளர் கட்சியின் கோபம் தணியவில்லை. நீதித்துறை அமைச்சர் சில்வி லிஸ்தாக் மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இத்தீர்மானம் வெற்றி பெற்றால் ஏற்கனவே மைனாரிட்டியாக உள்ள அந்த அரசு கவிழும் அபாயத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து