முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தையை கொன்றவருக்கு தூக்கு தண்டனை நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      திருநெல்வேலி

நெல்லை பேட்டையில் சிறுவனை வெட்டிகொன்ற சம்பவத்தில் வாலிபருக்கு துாக்கு தண்டணை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

துாக்கு தண்டணை

நெல்லை பேட்டை சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 38). இவருடைய மனைவி பிரேமா (30). இவர்களுக்கு கல்பனா (12) என்ற மகளும், தருண் மாதவ் (5) என்ற மகனும் இருந்தனர். இசக்கியப்பன் கத்தார் நாட்டில் வேலை செய்து வந்தார். பிரேமா குழந்தைகளுடன் பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.இவர்களுடைய பக்கத்து வீட்டில் ஆறுமுகம் (32) என்பவர் வசித்து வருகிறார். தொழிலாளியான ஆறுமுகத்துக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் பெண் பார்த்து உள்ளனர். அப்போது பிரேமா தனது உறவினரான மும்பையில் வசித்த கலாவை (28) ஆறுமுகத்துக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு, கலாவின் நடத்தையில் ஆறுமுகத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ஆறுமுகம், கலாவை அடித்து உதைத்ததால், கலா தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.இதனால் ஆறுமுகத்துக்கு, பிரேமா மீது ஆத்திரம் ஏற்பட்டது. தனது திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படுத்திய பிரேமாவை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்தார்.இந்த நிலையில் 8.9.2016 அன்று பிரேமாவை கொலை செய்ய முடிவு செய்தார். அன்று மாலை தனியார் பள்ளிக்கூடத்தில் யு.கே.ஜி. படித்த பிரேமாவின் மகன் தருண் மாதவ் (5) வேனில் வந்து வீட்டின் அருகில் இறங்கினான். அவனை பிரேமா கையில் பிடித்துக் கொண்டு வீடு நோக்கி நடந்து சென்றார்.அப்போது ஆறுமுகம், அவர்களை பின்தொடர்ந்து வந்தார். அவர் பிரேமாவிடம் தகராறு செய்து, அவதூறாக பேசினார். அங்குள்ள சுந்தர விநாயகர் கோவில் தெரு பகுதியில் நடந்து சென்றபோது, ஆறுமுகம் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரேமாவையும், தருண் மாதவையும் சரமாரியாக வெட்டினார்.இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்ததால் அரிவாளுடன் ஆறுமுகம் அங்கிருந்து தப்பி ஓடினார். சிலர் அவரை பிடிக்க முயன்றபோது அரிவாளை காட்டி மிரட்டி தப்பி ஓடினார். அப்போது தெருவில் திருப்பத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி தலையில் பலத்த அடி விழுந்து கீழே மயங்கி விழுந்தார். அவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பேட்டை போலீசார் அங்கு சென்று பிரேமா, தருண் மாதவ் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியில் சிறுவன் தருண் மாதவ் பரிதாபமாக இறந்தான்.இந்த சம்பவம் குறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நெல்லை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து  திங்களன்று  வழக்கில் தீர்ப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.இதையொட்டி ஆறுமுகம்  திங்களன்று   நீதிமன்றத்தில்  ஆஜரானார். அப்போது இந்த வழக்கில் ஆறுமுகம் குற்றவாளி என்று நீதிபதி அப்துல் காதர் அறிவித்தார்.இதில்  குற்றவாளி என திருபிக்கப்பட்ட ஆறுமுகத்திற்கு  செவ்வாய்கிழமை துாக்கு தண்டணை விதித்து நீதிபதி அப்துல்காதர்  தீர்ப்பு வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து