காரைக்குடி முத்துமாரியம்மன் பால் குட திருவிழா:

muthumariyamman 22 3 18

காரைக்குடி - காரைக்குடி முத்துமாரியம்மன் பால் குட திருவிழா  கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது இத் திருவிழாவில் ஒரு லட்சத்து 80ஆயிரம் பக்தர்கள் பல்குடம், காவடி, அக்னிசட்டி, அலகுகுத்துதல் மற்றும் முளைப்பாரி எடுத்து தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர்.  பள்ளி, கல்லூரிகளுக்கு நிர்வாகங்கள் விடுமுறை அளிக்க அனுமதி இத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுரிருந்தனர்.
கோயில் மற்றும் வாளாகத்தை சுற்றி 50க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுஇருந்தது. மேலும் குற்றச்சம்பவங்களை தடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்புப்  பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று பால்குட விழாவை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யபட்டது. இஸ்லாமிய சகோதர்கள் பக்கர்களுக்கு தர்பூசணி கீற்றுகளை வழங்கினர். நகரின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் பந்தல், அண்ண தானம் வழங்கியும் விழாவை கொண்டாடினர் பக்தர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து