சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் செட்டு மாணவர்களுக்கான பட்;டமளிப்பு விழா அமைச்சர்கள் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2018      சிவகங்கை
sivagangai medical colleage 27 3 18

சிவகங்கை. -  சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  முதல் செட்டு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மரு.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி துவங்கி 5 ஆண்டுகள் படித்து முடித்த முதல் செட்டு மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் பட்டங்களை வழங்கி பேசுகையில்,
          இன்று சிவகங்கை மண்ணிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த நன்னாளாகும். பிற்பட்ட பகுதியைச் சேர்ந்த இம்மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த புரட்சித்தலைவி அம்மா எண்ணற்ற பலத்திட்டங்களை இம்மாவட்டத்திற்கு  வழங்கி செயல்படுத்திய போதிலும் மருத்துவக் கல்லூரி அமைத்து செயல்படுத்தியது மிக உன்னதமான திட்டமாகும். கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் தங்கள் பகுதியிலேயே படித்து சிறந்து விளங்கிட வேண்டுமென தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும்  மருத்துவக் கல்லூரி துவக்கியது மட்டுமின்றி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு முன்பு இருந்த படிக்கும் மாணவர்களின் சீட்டுகளின் எண்ணிக்கையைவிட 1000 சீட்டு அதிகரித்து மாணவ, மாணவியர்களுக்கு வழங்கியுள்ளார்கள். அதன் மூலம் எண்ணற்ற மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகிறார்கள். அதனடிப்படையில் இன்று சிவகங்கையில் 5 ஆண்டுகள் படித்து மருத்துவப் பட்டம் பெற்று முதல் செட்டு மாணவ, மாணவியர்கள் எல்லோருடைய ஆசி பெற்று இந்த பட்டப்;படிப்புடன் மேலும் உயர்படிப்பு முடித்து சிறந்த மருத்துவராக பணியாற்றுவதுடன், கிராமப் பகுதிகளிலும் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு பொதுமக்களுக்கு தங்களது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும். பொதுவாக கிராமப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும்போது தங்கள் உடல்நிலையை குறித்து பல்வேறு கேள்விகளை கேட்பார்கள். அவர்களுக்கு கொஞ்சம் பொறுமையுடன் பதிலளித்து புன்னகையுடன் பேசினால் போதும். எவ்வளவு மருந்துகள் கொடுத்தாலும் அவர்களுக்கு தீராத சந்தேகம் சிறு புன்னகை என்ற அருமருந்தின் மூலம் அவர்களுக்கு நோய் குணமடையும் என்ற நம்பிக்கை உருவாகும். பணிகளில் மகத்தான பணி மருத்துவப் பணிமட்டுமே. இதை நகர்பகுதி மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் முழுமையாக பெற்று பயன்பெற வேண்டும் என்பதே மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவாகும். அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் இந்தியாவிலேயே பொது சுகாதாரத்தை சிறப்பாக வழிநடத்தி தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியவர் ஆவார். அவர் வழியில் வழி நடத்திச் செல்லும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அம்மா அவர்களின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பராமரிக்கப்பட்டு அதிகளவில் படுக்கை வசதி கொண்ட கட்டடங்கள் கட்டி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
         தற்பொழுது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் விபத்து சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல்  ரூ.1 கோடி மதிப்பீட்டில் தசை சிதைவு அடைந்த மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை வழங்கிட புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதுபோல் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு தேவையான அனைத்துத் திட்டங்களும் அரசு வழங்க தயாராக உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதுடன் இங்கு படிக்கும் மாணவ, மாணவியர்களும் மருத்துவத்துறையில் சிறந்த சாதனையாளராக வரவேண்டுமென வாழ்த்திக் கொள்கிறேன் என மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவத்தார்.
         பின்னர், முதல் செட்டில் பயின்ற 96 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் பட்டங்களை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
        இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன், மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் மரு.ஏ.எட்வின் ஜோ, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.வனிதா, துணை முதல்வர் மரு.மல்லிகா, மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மருதுபாண்டி, மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், பேராசிரியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து