கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் வருஷாபிஷேகம்: அமைச்சர் கடம்பூர்ராஜூ பங்கேற்பு

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2018      தூத்துக்குடி

சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் வருஷாபிஷேகம்  அதிகாலை யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. காலை 10 மணியளவில் கோபுர கலசங்களுக்கும் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அதனை தொடர்ந்து மஹா தீபாராதனையும் நடைபெற்றது. இதில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  கடம்பூர்.செ.ராஜூ  மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  பின்னர் அமைச்சர்  கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

வருஷாபிஷேகம்

சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் விரைவில் மஹாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை மூலமாக மலேசியாவில் உள்ள முருகன் போன்று இங்கு 110 அடியில் முருகன் சிலை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு, மாதிரி வரைப்படமும் தயாரிக்கப்பட்டு,  தமிழ்நாடு முதலமைச்சர்  நேரிடையாக ஆய்வு செய்தார்கள். பின்னர்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் , அரசு உயர் அலுவலர்கள் கோவிலை ஆய்வு செய்தனர். மேலும் இந்த கோவிலில் அன்னதான திட்டத்தினை  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  நேரிடையாக வந்து துவக்கி வைத்தார்கள். அந்த வகையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள மஹாகும்பாபிஷேக விழாவின் போது முருகனின் திருவுருவ சிலை அமைக்கப்படும். அது பொதுமக்களின் பங்களிப்புடன் அந்த சிலை அமைக்கப்படும் என்றார்.

மேலும், காவிரி மேலாண்மை பிரச்சினையில் ஆளும் கட்சி மத்திய அரசுக்கு ஆதரவாக இருப்பதாக தோற்றத்தினை உருவாக்கினார்கள். ஆனால் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ளது. அஇஅதிமுக சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி உண்ணாவிரதம் நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தினை இந்த அரசு பெற்று தரும்.  தமிழ்நாடு முதல்வர் மற்றும் துணை முதல்வர் வழிகாட்டுதலின் படிதான் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது. அஇஅதிமுக உண்ணாவிரதம் நாடகம் கிடையாது. திமுக ஈழ பிரச்சனையில் இருந்த உண்ணாவிரதம் தான் நாடகம் என்றும், கூட்டுறவு தேர்தல் சுமூகமாக நடைபெறுகிறது. தேர்தல் என்றால் மோதல் வரும், பிரிந்து சென்றவர்கள் பதவி ஆசைக்காக போட்டியிடுவார்கள். அதனை தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள் என  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  தெரிவித்தார்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து