காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      திருச்சி
kulithalai

உச்ச நீதிமன்ற உத்திரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம், குளித்தலை தந்தை பெரியார் பாலத்தில் நேற்று காலை நடைபெற்றுது.  முன்னதாக அனைவரும் குளித்தலை பேருந்துநிலையம் காந்திசிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.  இதனைத் தொடர்ந்து ஊர்வலமாக சென்று காவிரி பாலத்தின் மேல் அனைவரும் கைகோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து