கலெக்டர் வளாகத்தில் கூடுதல் கட்டடம் அடிக்கல் நாட்டும் விழா - முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      தமிழகம்
eps-ops

கலெக்டர் வளாகத்தில் கூடுதல் கட்டடம் அடிக்கல் நாட்டும் விழா - முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 06.09.1790 முதல் செயல்பட்டு வருகிறது, மிக பழமையான கட்டிடம் , தற்போது உள்ள கட்டிடம் 1916 ம் ஆண்டு கட்டப்பட்டது, பல்வேறு இடங்களில் உள்ள அரசு அலுவலங்களை ஒருகிணைந்து மக்களுக்கு சேவை வழங்குவதற்க்காக தமிழக முதலமைச்சர் அவர்களால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக 2017- 2018 ம் ஆண்டிற்க்கான வரவு செலவு கூட்டத்தொடரில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் சட்ட மன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் ரூ, 26. 62 கோடி செலவில் கூடுதல் கட்டடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது, அதன் படி இன்று கூடுதல் கட்டடம் அடிக்கல் நாட்டும் விழா மற்றும் நலத்திட்ட உதவி 1540 பேருக்கு 3,99, 30,800 ரூபாய்க்கான நல திட்ட உதவியை , தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார், உடன் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னிர் செல்வம், மற்றும் அமைச்சர்கள் , மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், இருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து