வங்கிகளின் வாராக்கடன் அளவை ரூ.100 கோடியாக குறைக்க முடிவு

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      வர்த்தகம்
central gcenovernment(N)

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு வங்கிகளின் வாராக்கடன் அளவை ரூ. 100 கோடியாகக் குறைக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் தற்போது வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினை மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்ந்த நிதி மோசடி, ஐசிஐசிஐ வங்கி விவகாரம் ஆகியன குறித்து எதிர்க்கட்சிகள் கடும் நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்தி வருகின்றன. இதனால் வாராக்கடன் அளவை ரூ. 100 கோடியாகக் குறைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை கடுமையாக்கியது. இதன்படி வங்கிகள் மேற்கொள்ளும் கடன் சீரமைப்பு திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதன்படி ரூ. 2 ஆயிரம் கோடிக்கு மேலான கடன்களை வாராக்கடன் (என்பிஏ) பட்டியலில் சேர்க்குமாறு வலியுறுத்தியது. அத்துடன் 180 நாள்களுக்குள் இந்தக் கடன்கள் மீது திவால் மசோதா நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து