முடிவுக்கு வந்த நோக்கியா வரிப் பிரச்சினை

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2018      வர்த்தகம்
nokia

இந்தியா மற்றும் பின்லாந்து நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர ஒப்பந்த நடைமுறை (எம்ஏபி) மூலம் நோக்கியா நிறுவனம் வரி செலுத்துவதில் நீடித்துவந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் சென்னையில் உள்ள நோக்கியா உற்பத்தியகத்தை விற்பதற்கான நடவடிக்கைகளில் அந்த நிறுவனம் ஈடுபட முடியும்.

இது தொடர்பான நடைமுறைகளை பரஸ்பர ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும் முடித்துவிட்டதாகவும், எனவே பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் மூத்த வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வரி செலுத்த நோக்கியா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து