முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருப்புக்கோட்டை அரசு கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2018      விருதுநகர்
Image Unavailable

 அருப்புக்கோட்டை - அருப்புக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 300 மாணவ மாணவிகளுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துறை  பட்டங்களை வழங்கி பேசினார்.
 அருப்புக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது.  பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி இயக்குநர் சந்திரசேகர் முன்னிலை வகிகத்தார்.  அரசு கலைக்கல்லூரி முதல்வர் துரைராஜ் வரவேற்று பேசினார்.   300 மாணவ மாணவிகளுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை பட்டங்களை வழங்கி சிறப்புரை வழங்கினார்.  பேசியதாவது மாணவ மாணவிகள் படித்து  பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை தேடி தரவேண்டும்.  எழுச்சிமிக்க பாரதம் உருவாக மாணவ மாணவிகள் ஆசிரியர்களிடம் தோளோடு தோள்சேர்ந்து செயல்படவேண்டும்.  உங்கள் பெற்றோர்கள் உங்களை சமுதாயத்தில் உயர்த்த பாடுபட்டு வருகின்றனர்.  மாவீரன் அலெக்சாண்டர் வெற்றிக்கு ஊக்கமளித்தவர் பெற்றோர்கள். அடுத்தபடியாக வெற்றி வழிவகுத்தவர்கள் ஆசிரியர்கள். முhணவ மாணவிகள் படித்து அறிவையும், ஒழுக்கத்தையும், நல்ல பண்புகளையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். வாழ்க்கையில் வெற்றி மற்றும் சாதனைகள் அதிகமாக நகரத்தை விட கிராமப்புற மாணவ மாணவிகளிடமே கிடைக்கிறது.  முhணவ மாணவிகள் பணம் இல்லை மார்க் குறைந்து விட்டது போன்றவற்றினால் தற்கொலை செய்துவது, அவமானப்படுவதை வீட்டில் உள்ள பெற்றோர்கள் கண்காணித்து தைரியம் ஊட்டவேண்டும் என்று கூறினார்.
 துணைவேந்தர் நிருபர்களிடம் கூறியதாவது கலைக்கல்லூரியில் சாலை மற்றும் பேருந்து வசதிகள் இல்லைஎன ஏற்கனவே முதல்வர் அவர்கள் கூறியுள்ளார்.   எனவே அது சம்மந்தமாக மாவட்ட நிர்வாகத்தை அனுகி சாலை மற்றும் பேருந்து வசதிகள் செய்து தரப்படும்.  ஏற்கனவே ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். புயிற்சி வகுப்புகள்  நiபெற்றபோது மாவட்ட ஆட்சியர்; வந்துள்ளார்.  அவரிடமும் கல்லூரிகள் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.  மேலும் கல்லூரியில் உள்ள நூலகத்தை விரிவு படுத்தவும், பி.ஜி கோர்ஸ் துவங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.  துனியார் கல்லூரி மாணவி பாலியல் தொந்தரவு சம்மந்தமாக துணைவேந்தர் செல்லத்துரையிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது பதில் சொல்லாமல் மவுனமாக இருந்தார்.  குடைசியாக மாணவிகள் விசயத்தில் பொறுமையாக இருந்தால் உண்மை வெளிவரும் என்று கூறினார்.
 வுpழாவில் கல்லூரி மாணவ மாணவிகள், பெற்றோர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து