முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் மாநிலங்கள்

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2018      வர்த்தகம்
Image Unavailable

இந்தியாவில் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஆனால் கிழக்கு பகுதியில் இருக்கும் பிகார், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளுகின்றன என்று நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: எளிதாக தொழில் புரிவதற்கான பட்டியலில் நாம் உயர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் இன்னும் கடைசி கட்டத்தில் இருக்கிறோம். 2016-ம் ஆண்டு கணக்குப்படி, 188 நாடுகள் உள்ள பட்டியலில் இந்தியாவுக்கு 133-வது இடம் கிடைத்திருக்கிறது. மனிதவள குறியீட்டில் இந்தியாவுக்கு முன்பாக எகிப்து (111), இந்தோனேஷியா (113), தென் ஆப்பிரிக்கா (119) மற்றும் ஈரான் (121) ஆகிய நாடுகள் நம்மை விட உயர்ந்த இடத்தில் இருக்கின்றன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து