முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் யூனியனில் ரூ.56லட்சம் செலவில் புதிய சாலைகள் அமைத்திட பூமிபூஜை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பணிகளை தொடங்கி வைத்தார்:

ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் ரூ.56லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைத்திடுவதற்காக நடைபெற்ற பூமிபூஜையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தங்குடி கிராமத்தினரின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேற்கொண்ட முயற்சியின் பயனாக சாத்தங்குடி கிராமத்திலிருந்து போல்நாயக்கன்பட்டி கிராமத்திற்கு ரூ.56லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.இதையடுத்து மேற்கண்ட சாலை அமைத்திடும் பணிகளுக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கலந்து கொண்டு சாத்தங்குடி-போல்நாயக்கன்பட்டி இடையே ரூ.56லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்திடும் பணிகளை தொடங்கி வைத்தார்.முன்னதாக சாத்தங்குடியிலிருந்து பச்சக்கோப்பன்பட்டிக்கு செல்லும் சாலையில் ரூ.5லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தையும்,பேவர்பிளாக் சாலையையும் அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் வக்கீல்.அன்பழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,பேரூர் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,ஒன்றிய அவைத் தலைவர் அன்னக்கொடி,துணை செயலாளர் சுகுமார்,இணைச் செயலாளர் சுமதிசாமிநாதன்,கட்சி நிர்வாகிகள் சிவஜோதி தர்மர்,பிச்சமணி,மீனாலட்சுமி,நாகலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து