இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

புதன்கிழமை, 9 மே 2018      வர்த்தகம்
dollar rupee 0

அமெரிக்க கரன்சியான டாலரின் தேவை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் சர்வதேச அளவில் பெருமளவிலான கரன்சிகளுக்கு எதிரான டாலர் மதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 37 பைசாக்கள் குறைந்து காணப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுடனான சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறோம் என்று அறிவித்ததும், அமெரிக்க டாலர் மதிப்பு சந்தையில் உயர்வதற்கு காரணம் ஆக அமைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு செவ்வாய்கிழமை 5 பைசாக்கள் அதிகரித்து ரூ.67.08 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 37 பைசாக்கள் குறைந்து காணப்பட்டது.  இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 67.45 ஆக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து