போடியில் தொடர் மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வியாழக்கிழமை, 10 மே 2018      தேனி
bodi rain news 11 5 18

போடி, -    போடியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பிள்ளையார் அணையில் தண்ணீர் அருவி போல் கொட்டி வருகிறது.
     போடியில் கடந்த 5 நாட்களாக மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இரவு வரை தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கு ஏற்பட்டு வந்தது. போடி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் பரவலான மழை பெய்ததால் மலைகளில் ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
     இதனையடுத்து  போடி கொட்டகுடி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் புதன் கிழமை இரவு பெய்த பலத்த மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வேட்டவராயன் கோவில் அருகே கட்டப்பட்ட புதிய பாலம் மேல் மட்டம் வரை தண்ணீர் சென்றது.
     இதனால் போடி பிள்ளையார் அணையிலும் தண்ணீர் அருவி போல் கொட்டுகிறது. தற்போது கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில் பிள்ளையார் அணை பகுதியில் பொதுமக்கள் குளித்து வருகின்றனர். தொடர்ந்து வியாழக்கிழமை மாலையும் போடி பகுதியில் பரவலான நல்ல மழை பெய்து வருகிறது.
     இதனிடையே மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருவதால் தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலுக்கு போடி பகுதியிலிருந்து இரவு நேரங்களில் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இக்கோவிலுக்கு பகலில் அதிகமாக பக்தர்கள் சென்று வருவதால் பகலில் கோவிலில் கூட்டம் அதிகரித்துள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து