ஜியோவில் 199 ரூபாயில் புதிய சலுகைகள்

வெள்ளிக்கிழமை, 11 மே 2018      வர்த்தகம்
jio logo(N)

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.199க்கு அதிரவைக்கும் பல புதிய சலுகைகளை அறிமுகப்படுத்த உள்ளது. வரும் 15-ம் தேதி முதல் ஜியோ நிறுவனம் அதிரடியான சலுகைகளை, மிகக் குறைந்த விலையில் போஸ்ட்பெய்ட் சேவையைத் தொடங்குகிறது.

ரூ.199க்கு அன்லிமிடட் கால்ஸ், மாதத்துக்கு 25 ஜிபி நெட், வெளிநாடுகளுக்கு பேசுவதற்கு நிமிடத்துக்கு 50 காசுகள் என பல்வேறு சலுகைகளை அளிக்கிறது. இத்திட்டம் வரும் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஜியோ போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் சிம்கார்டைப் போட்டவுடன் அனைத்து வசதிகளும், அதாவது வாய்ஸ் கால், இன்டர்நெட், எஸ்எம்எஸ், சர்வதேச அழைப்புகள் ஆகியவை அனைத்தும் முன்கூட்டியே ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து