முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது நாளாக மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயித்து கொள்ளும் உரிமையை பெற்றதில் இருந்து விலை உயர்ந்து வருகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல் காரணமாக கடந்த 3 வாரமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. அதாவது கடந்த மாதம்  24-ம் தேதி நிர்ணயிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலையே மே மாதம் 15-ம் தேதி வரை நீடித்தது. பெட்ரோல் லிட்டர் ரூ. 77.82-ம், டீசல் 69.92-ம் நிர்ணயிக்கப்பட்டு தொடர்ந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் கடந்த 20 நாட்களாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து 14-ம் தேதி விலை உயர்த்தப்பட்டது. ரூ. 77.82 பைசாவாக இருந்த பெட்ரோல் 20 காசு உயர்ந்தது. டீசல் லிட்டருக்கு 24 பைசா அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

பெட்ரோல் சென்னையில் லிட்டர் ரூ. 78.17 ஆகவும், டீசல் ரூ. 70.40 ஆகவும் அதிகரித்தது. தொடர்ந்து விலையேறும் நிலையில் உள்ளது. சென்னையை பொறுத்தவரை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெட்ரோல் லிட்டர் ரூ. 12.25, டீசல் ரூ. 13.66 ஆகய உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி ஒருலிட்டர் பெட்ரோல் ரூ. 65.13 ஆக இருந்தது. பெட்ரோல், டீசல் இடையே விலை வித்தியாசம் முன்பு அதிகமாக இருந்ததால் அதிகளவு டீசல் கார்களை மக்கள் விரும்பி வாங்கினார்கள். ஆனால் தற்போது இரண்டிற்கும் உள்ள விலை வித்தியாசம் மிகவும் குறைவாக இருப்பதால் டீசல் வாகனங்களை விட பெட்ரோல் வாகனங்கள் அதிகம் விற்பனையாகின்றன. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் கவலையடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து