முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி மாரியம்மன் வைகாசி திருவிழா

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      மதுரை
Image Unavailable

  திருமங்கலம்.- திருமங்கலம் பாண்டியகுல சத்திரிய நாடார்கள் உறவின்முறையைச் சேர்ந்த அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி மாரியம்மன் திருக்கோவில் வைகாசித் திருவிழா வரும் 12ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது.
திருமங்கலம் நகரில் பாண்டியகுல சத்திரிய நாடார்கள் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட பழம்பெருமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.இங்கு ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் வைகாசி திருவிழா 13 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் 2018ம் ஆண்டு ஸ்ரீவிளம்பி வருட வைகாசி திருவிழா வரும் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11மணியளவில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது.
அதன்படி திருவிழாவின் முதல் நாளான மே மாதம் 20ம்தேதி இரவு சிம்மவாகனத்தில் ஸ்ரீமாரியம்மன் நகர்வலம் வருகிறார்.இரண்டாம் நாளான 21ம் தேதி காலை வெள்ளிச்சப்பரத்திலும்,இரவு பூதவாகனத்திலும் ஸ்ரீமாரியம்மன் நகர்வலம் வருகிறார்.மூன்றாம் நாளான 22ம் தேதி காலை வெள்ளிச்சப்பரத்திலும்,இரவு அன்ன வாகனத்திலும் ஸ்ரீமாரியம்மன் நகர்வலம் வருகிறார்.நான்காம் நாளான 23ம் தேதி காலை வெள்ளிச்சப்பரத்திலும்,இரவு காமதேனு வாகனத்திலும் ஸ்ரீமாரியம்மன் நகர்வலம் வருகிறார்.ஐந்தாம் நாளான 24ம் தேதி காலை வெள்ளிச்சப்பரத்திலும்,இரவு பெரியகுதிரை வாகனத்திலும் ஸ்ரீமாரியம்மன் நகர்வலம் வருகிறார்.ஆறாம் நாளான 25ம் தேதி பகலில் வெள்ளிச்சப்பரத்தில் ஸ்ரீபத்திரகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன் நகர்வலம் வந்து அக்காரெட்டி நாடார் மண்டகப்படி சேர்தல்,பின்னர் இரவு 1மணிக்கு அம்மன்கள் ரிஷப வாகனங்களில் புறப்பட்டு கழுவேற்ற பொட்டலில் சமணர்கள் கழுவேற்றம்,சம்பந்த மூர்த்திகள் தரிசனம் முடிந்து கோவில் வந்து சேர்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவின் ஏழாம் நாளான 26ம் தேதி காலை வெள்ளிச்சப்பரத்திலும்,இரவு புஷ்பப் பல்லக்கில் ஸ்ரீமாரியம்மன் நகர்வலம் வருகிறார்.எட்டாம் நாளான 27ம் தேதி காலை தண்டிகையிலும்,இரவு புஷ்பசப்பரத்திலும் ஸ்ரீமாரியம்மன் நகர்வலம் வருகிறார்.ஒன்பதாம் நாளான 28ம் தேதி மாலை கோவிலிலிருந்து முளைப்பாரி எழுந்தருளி நகர்வலம் வந்து ஆற்றில்சேர்த்தல்,இரவு சேஷவாகனத்தில் ஸ்ரீமாரியம்மன் நகர்வலம் வருகிறார்.பத்தாம் நாளான 29ம் தேதி பகலில் ஸ்ரீபத்திரகாளியம்மன்,ஸ்ரீமாரியம்மன் வெள்ளிச்சப்பரத்தில் நகர்வலம்,இரவு 1.30 மணியளவில் வெள்ளிசிம்ம வாகனத்தில் ஸ்ரீபத்திரகாளியம்மனும்,குதிரை வாகனத்தில் ஸ்ரீமாரியம்மனும் புறப்பட்டு வந்து கோவில் முன்பாக மஹிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.பதினொன்றாம் நாளான 30ம் தேதி காலை வெள்ளிச்சப்பரத்தில் ஸ்ரீமாரியம்மன் நகர்வலம்,இரவு கொலு மண்டபத்தில் லட்சதீபம்,மாவிளக்குடன் ஸ்ரீமாரியம்மன் பக்தி உலாத்துதல் நடைபெறுகிறது.
திருவிழாவின் பன்னிரென்டாம் நாளான 31ம் தேதி காலையில் வெள்ளிச்சப்பரத்திலும்,இரவில் யானை வாகனத்திலும் ஸ்ரீமாரியம்மன் நகர்வலம் வருகிறார்.விழாவின் கடைசி நாளான ஜூன் 1ம் தேதி காலை 10மணிக்கு குதிரைவாகனத்தில் புறப்பட்டு கழுவேற்ற பொட்டலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் ஸ்ரீமாரியம்மன் எழுந்தருளல்,மாலை 3மணிக்கு குண்டாற்று ஊத்துமண்டபம் வந்து சேர்ந்து தீர்த்தவாரி,இரவு 10மணிக்கு மேல் தசாவதாரம்,பின்னர் சுவாமி ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வந்து கொடியிறக்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இந்த வைகாசி திருவிழாவிற்கான விழாவிற்கான ஏற்பாடுகளை அருள்மிகு பத்திரகாளி மாரியம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா ரமேஷ்பாபு நாடார்,திருமங்கலம் பி.கே.என் உறவின்முறை நாட்டான்மைகள் பி.கே.பூமிநாதன் நாடார்,ஆர்.திருஞானம் நாடார், பி.சுரேஷ்கண்ணா நாடார் மற்றும் வைகாசி உற்சவ விழா சிறப்பு கமிட்டி தலைவர் எம்.பாலமோகன் நாடார்,செயலாளர் செல்வம் நாடார்,பொருளாளர் விஜயகுமார் நாடார் மற்றும் உறவின்முறை நிர்வாகிகள்,வித்யாசாலா கமிட்டி நிர்வாகிகள் சிறப்புடன் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து