பெரியகுளத்தில் ;நடைபெற்று வரும் 59வது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி சென்னை, போபால், அணிகள் வெற்றி

புதன்கிழமை, 16 மே 2018      தேனி
walibal news 16

தேனி -  பெரியகுளத்தில் சில்வர் ஜுபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பி.டி.சிதம்பரசூரிய நாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 59வது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டிகள் பி.எஸ். துரைராம சிதம்பரம் நினைவு மின்னொளி அரங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. விளையாட்டு கழக கொடியை பிபா கமிஷனர் தனபாலன் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற  முதல் போட்டியில் பெரியகுளம் சில்வா ஜுபிலி அணியும், திருநெல்வேலி அணியும் மோதின. இதில் பெரியகுளம் அணி 56-44 என்ற புள்ளி கணக்கில் திருநெல்வேலி அணியை தோற்கடித்தது. இரண்டாவது போட்டியில் திண்டுக்கல் கூடைப்பந்து அணி மதுரை தமிழ்நாடு சிறப்பு காவல் அணியை 66-59 என்ற புள்ளி கணக்கிலும், மூன்றாவது போட்டியில்  சென்னை விளையாட்டு விடுதி அணி கரூர் அணியை
85-51 என்ற புள்ளிகணக்கிலும் தோற்கடித்தது. நேற்று காலை நடைபெற்ற போட்டியில் பட்டிவீரன்பட்டி அணி, திருச்செங்கோடு அணியை 70-65 என்ற புள்ளிகணக்கில் தோற்கடித்தது. இரண்டாவது போட்டியில் கோராக்பூர் வடகிழக்கு ரயில்வே அணி, பெரியகுளம் சில்வர்ஜுபிலி அணியை 66-45 என்ற புள்ளிகணக்கில் வென்றது. மற்றொரு போட்டியில் போபால் ஈ.எம்.ஈ அணி திண்டுக்கல் அணியை
62-43 என்ற புள்ளிகணக்கில் வென்றது. நேற்று மாலையில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை விளையாட்டு விடுதி அணியும்  பெங்களுரு சி.எம்.பி அணியும் மோதியதில் சென்னை அணி 87-42 என்ற புள்ளிகணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் சென்னை தெற்கு ரயில்வே அணி பட்டிவீரன்பட்டி அணியை 63-35 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தது. மூன்றாவது போட்டியில் கோராக்பூர் வடகிழக்கு ரயில்வே அணியை சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ் அணி
101-76 என்ற புள்ளிகணக்கில் வென்றது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து