ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி

செவ்வாய்க்கிழமை, 22 மே 2018      தேனி
andippati jamapanthi 22

தேனி, - தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை உள்வட்டத்திற்குட்பட்ட கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மேகமலை ஆகிய வருவாய் கிராமங்களுக்கான 1427-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில்   மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ்,  நடத்தப்பட்டது.
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) ஐந்தாம் நாளான இன்று ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை உள்வட்டத்திற்குட்பட்ட கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மேகமலை ஆகிய வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களிடமிருந்து 199 கோரிக்கை மனுக்களும், உத்தமபாளையம் வட்டம், எரசக்கநாயக்கனூர் உள்வட்டத்திற்குட்பட்ட வேப்பம்பட்டி, சீப்பாலக்கோட்டை, ஓடைப்பட்டி, அழகாபுரி, எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைப்பட்டி, ஏரசக்கநாயக்கனூர் மலை ஆகிய வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களிடமிருந்து 97  கோரிக்கை மனுக்களும், என மொத்தம் பொது மக்களிடமிருந்து 296 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
     மேலும், வருவாய்த்துறையின் சார்பில் நத்தம் வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு நத்தம் வீட்டுமனைப்பட்டாவிற்கான ஆணையினையும், உட்பிரிவு பட்டா மாறுதல் வழங்கும் திட்டத்தின் கீழ் 19 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதலுக்கான ஆணையினையும், மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 19 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும் என மொத்தம் 42 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ்,   வழங்கினார்.
 இந்நிகழ்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் செல்வி கவிதா  ஆண்டிபட்டி வட்டாட்சியர்கள்செந்தில் இளங்கோ   மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து