மனு நீதி நாள் முகாமில் 472 பயனாளிகளுக்கு ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்

minser baskeran

     சிவகங்கை,- சிவகங்கை  மாவட்டம,; சிவகங்கை வட்டம், தமறாக்கி  கிராமத்தில்  மனு நீதி நாள் முகாம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்  .க.லதா,  தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்  ஜி.பாஸ்கரன்  பொதுமக்களிடம்; கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்,
         தமிழக அரசானது மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக  சிறப்பான முறையில்  செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசை தேடி மக்கள் என்ற நிலைமாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் மேன்மேலும் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்துத்துறை அரசு முதன்மை அலுவலர்களை கொண்டு மனுநீதி நாள் முகாம் மாதம் ஒருமுறை மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் தோறும்  நடைபெறுகிறது.  இம்முகாமில், தமிழக அரசால்; அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் தனிமனிதன் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைகிறது. குறிப்பாக, பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இன்றைக்கு மனுநீதி நாள் முகாமிற்கென சிவகங்கை வட்டம், தமறாக்கி ஊராட்சி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பெறப்பட்ட 650 மனுக்களில் தகுதியுடைய மனுதாரர்களுக்கு உடனடி தீர்வு மூலம் இன்று 472 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை தொடர்பாக தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
        மேலும், மனுநீதி நாள் முகாமின் நோக்கம் கிராமப் பகுதியில் பொதுமக்களின் தேவையை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றுவதே ஆகும். இதனை இப்பகுதியில் உள்ள பொதுமக்களும் கருத்தில் கொண்டு, ஒவ்வொருவரின் வளர்ச்சி மட்டுமின்றி ஊரின் வளர்ச்சிக்கும் இதுபோன்ற முகாம் மிக பயனுள்ளதாக இருக்கும் மற்றும் ஒரு கிராமம் முழுமையாக வளர்ச்சி பெற வேண்டுமென்றால் அங்கு எவ்வித பாகுபாடுடின்றி ஒன்று கூடி திட்டங்கள் தீட்டி செயல்பட்டால் அங்கு முழுமையான வளர்ச்சியை பெறமுடியும். அந்த வகையில் கிராம மக்கள் ஒன்று கூடி செயல்பட்டு சிறந்த முன்னேற்றத்தை பெற்று பயன்பெற வேண்டும்.
        பொதுவாக கல்வி என்பது மிக அவசியமான ஒன்றாகும். அதில் ஆண், பெண் என்று பாராமல் இருபாலரும் உயர்கல்வி வரை படித்து பெரிய பதவிகளை பெற்று தங்களுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் பெருமை தேடித்தர வேண்டும். அதேபோல் கிராமத்திலுள்ள பெண்கள் கூட்டாக சேர்ந்து சுயஉதவிக் குழுக்கள் அமைத்து தொழில் பயிற்சி பெற்று நகர்ப்பகுதியில் கூட்டுத் தொழில் அமைத்து பொருளாதார முன்னேற்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், ஊராட்சிகளுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதுடன் மேலும் ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களையும் கேட்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்பகுதியில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் சுழல்நிதி கடன் வழங்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த மகளிர் குழு சிறந்து செயல்படுவது போல் மற்றக் குழுக்களும் சிறப்பாக செயல்படுவதுடன் ஒவ்வொரு குழுவும் வங்கியில் வாங்கும் கடனை முறையாகச் செலுத்தும் பொழுது வங்கிகள் தானாக முன்வந்து மற்ற குழுக்களுக்கும் எளிதாக கடன் கொடுப்பதுடன் பரிந்துரை செய்யும் எங்களைப் போன்றோருக்கு இதன் மூலம் பெருமைப்படுத்தப்படுகின்றன. அதேபோல் உப்பாறு பகுதியில் ரூ.1 கோடியே 90 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி நடைபெறவுள்ளன. மேலும் கொட்டகுடி கால்வாயில் சீர்யமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
        மேலும் இப்பகுதியில் கிராம சேவை மையம் கட்டிடம் கட்டப்பட்டு மகளிர் சுயஉதவிக் குழு மூலம் இணையதளம் வழியாக பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ் விண்ணப்பம் பெறப்பட்டு வழங்கும் வகையில் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.  என்றென்றும் உங்களுக்கு உறுதுணையாக நான் இருப்பேன் என  மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்  ஜி.பாஸ்கரன் அவர்கள் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து