முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய திரைப்படங்களை திரையிட பாகிஸ்தானில் இடைக்கால தடை

வெள்ளிக்கிழமை, 25 மே 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ரம்ஜானுக்கு 2 நாட்களுக்கு முன்பு முதல் விடுமுறைக்கு 2 வாரங்கள் பின்பு வரை இந்திய மற்றும் வெளிநாட்டு திரைப்படங்களை திரையிடுவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.

இது குறித்து பாகிஸ்தானின் தகவல் தொலைதொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ரம்ஜானுக்கு 2 நாட்களுக்கு முன்பு முதல் விடுமுறைக்கு 2 வாரங்கள் பின்பு வரை இந்திய மற்றும் வெளிநாட்டு திரைப்படங்களை திரையிடுவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது. இது உள்ளூர் திரைத்துறையை பாகிஸ்தானில் ஊக்கமளித்து புதுப்பிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை. அதனால், வெளிநாட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் இந்திய திரைப்படங்களை மேற்கண்ட நாட்களில் திரையரங்குகளில் திரையிடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தானின் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர், நடிகையர் இந்தியா மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களுடனான கடும் போட்டியால் தங்களது திரைப்படங்களுக்கு குறைவான திரையரங்குகளே கிடைக்கிறது என்று புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து