முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்பாதவர்: பாக். முன்னாள் அதிபர் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 26 மே 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: இந்திய பிரதமர் நரேந்தி மோடி அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்பாதவர் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் குற்றம்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மற்றும் ராணுவத் தளபதியான பர்வேஸ் முஷாரப் வாய்ஸ் ஆப் அமெரிக்கா என்ற ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்பாதவர் என்று குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்தியாவின் அணு ஆயுத உற்பத்தி குறித்து யாரும் கேள்வி எழுப்பமாட்டார்கள். இந்தியாவின் இந்த தொடர் அச்சுறுத்தல் காரணமாகவே பாகிஸ்தான் அரசும் அணு ஆயுத உற்பத்தியை அதிகப்படுத்தியது.

பாகிஸ்தான் எப்போதுமே அமெரிக்காவுக்கு விசுவாசமாகத்தான் இருந்துள்ளது. இந்தியாவின் அணு ஆயுத கொள்கையை அமெரிக்கா தடுத்திருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தானைப் போன்று அல்லாமல் இந்தியாவிடம் வேறு மாதிரியான அணுகுமுறையை அமெரிக்கா பின்பற்றி வருகிறது.

இந்திய பிரதமர்களான வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் ஆகிய இருவரிடமும் நான் அமைதி குறித்து பேசியுள்ளேன். இதுதொடர்பாக என்னுடைய திட்டத்தையும் தெரிவித்துள்ளேன். இந்த இரு தலைவர்களும் அமைதியை விரும்பியதால் இதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்பினார்கள்.

ஆனால் தற்போது நிலைமை வேறுமாதிரியாக உள்ளது. இந்தியாவில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தவே பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். அவர் அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்பாதவர். எனவே அதற்கு ஒரு முடிவுகட்ட நினைப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து