பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

புதன்கிழமை, 6 ஜூன் 2018      வர்த்தகம்
Petrol price1(N)

ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது இறங்குமுகமாக உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.80.94 ஆகும். நேற்று 14 காசு குறைந்து இது ரூ.80.80 ஆனது. இதே போன்று நேற்று முன்தினம் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 72.82-க்கு விற்பனையானது. நேற்று இது 10 காசு சரிந்து ரூ.72.72 ஆனது.

நேற்று பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7-வது நாளாக சரிவை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலைச்சரிவு அமைந்து உள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து