புஞ்ச்லாய்டு மீது ஐ.சி.ஐ.சி.ஐ. வழக்கு

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2018      வர்த்தகம்
icici logo

புஞ்ச்லாய்டு நிறுவனத்தின் மீது தேசிய சட்ட நிறுவன தீர்ப்பாயத்தில் (என்சிஎல்டி) ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி (திவால் சட்டத்தின் கீழ்) வழக்கு தொடுத்திருக்கிறது. புஞ்ச்லாய்டு நிறுவனம் ரூ.852 கோடி கடனை செலுத்தாத நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

என்சிஎல்டி நீதிபதி எம்.எம்.குமார் இது தொடர்பாக புஞ்ச்லாய்டு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இருந்தாலும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இந்த முடிவுக்கு எஸ்பிஐ எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திவால் சட்டத்துக்கு வெளியே ஆறு மாதத்துக்குள் வங்கிகள் கடன் பிரச்சினைகளுக்கு தீர்வினை ஏற்படுத்திக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து