முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வன்முறையை தூண்டும் விதமாக யார் பேசினாலும் ஜெயில் நிச்சயம் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: ஜனநாயகத்தில் வன்முறையை தூண்டும் விதமாக யார் பேசினாலும் அதை ஏற்க முடியாது. அவர்களுக்கு ஜெயில் நிச்சயம் என்றும், கடலை குப்பைத்தொட்டியாக்க கூடாது என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
 
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் சென்னை கடலோர பகுதியில் பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் தொடர்பான விழிப்புணர்வு முகாமை நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

பெரும்பாதிப்பு
பிளாஸ்டிக் பொருட்களின் மாசால் உயிரினங்களுக்கு மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்திற்கே ஆபத்து. கடலில் ஏற்படும் பிளாஸ்டிக் மாசால் உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களால் கடலில் மீன் இனப்பெருக்கத்திற்கும் பெரும்பாதிப்பு ஏற்படுகிறது. உதாரணத்திற்கு கடலில் பிடிக்கப்படும் ஒரு முறை மீனவர்கள் பிடித்த சுறாவையும் திமிங்கலத்தையும் அறுத்து பார்த்தால் 5 கிலோ முதல் 10 கிலோ வரை அதன் வயிற்றில் பிளாஸ்டிக் இருந்ததாம், இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தான் இயற்கை ஆர்வலர்கள் பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைக்க வேண்டும் என்று கோருகிறார்கள்.

மாசுக்கட்டுப்பாட்டு...
நாம் வாழும் உலகில் முதல் முதலாக கடலில் இருந்து தோன்றியது ஆமிபா தான், அதன் பின்னர் தான் மனிதன் உருவானதாக சொல்லப்படுகிறது. அத்தகைய கடல் மாசுபடாமல் இருக்க வேண்டியது அவசியமாகும். கடல் வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்க வேண்டும், மாறாக குப்பைத்தொட்டியாக இருக்க கூடாது. பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து மீன்வளத்துறையும் மீன்வளப் பல்கலைக்கழகமும் ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதன் ஆய்வின் விளைவாக எங்கெங்கே எந்தெந்த தொழிற்சாலைகளால் மாசு ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து அதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்கிறது.

விழிப்புணர்வு...
அதன் அடிப்படையில் சட்டத்தின் மூலம் அந்த தொழிற்சாலைகள் மீது சட்டப்படியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பிளாஸ்டிக் உள்ளிட்ட சூழலியல் பாதிப்பை சட்டத்தின் மூலம் முழுமையாக தடுத்தாலும் மக்களிடம் விழிப்புணர்வு அவசியமாகும். மன்சூரலிகான் கைது குறித்து அவர் தெரிவிக்கையில், ”மன்சூர் அலிகான் என்ன சந்திரனிலிருந்து குதித்தவரா? இல்லை சூரியனில் இருந்து குதித்தவரா? ஜனநாயகத்தில் வன்முறையை தூண்டும் விதமாக யார் பேசினாலும் அதை ஏற்க முடியாது. அவர்களுக்கு ஜெயில் நிச்சயம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து