முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானங்களில் இருப்பது போன்று ரயில்களிலும் நவீன கழிப்பறைகள் - அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : விமானங்களில் இருப்பது போன்று ரயில்களிலும் கழிப்பறைகள் தரம் உயர்த்தப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

விமான நிறுவனங்களுடன் ரயில்வே போட்டியிடவுள்ளது. விமானங்களில் இருப்பது போல் ரயில்களிலும் பயோ கழிப்பறைகள் மேம்படுத்தப்படும். நாடு முழுவதும் பெரும்பாலான ரயில்களில் பயோ கழிப்பறைகள் உள்ளன. விமானங்களுக்கு நிகராக ரயில் பயணங்களும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் ரயில்களில் இருக்கும் பயோ கழிப்பறைகளை தரம் உயர்த்த திட்டமிட்டு வருகிறோம்.

முதல்கட்ட சோதனை முயற்சியாக 500 கழிப்பறைகள் தரம் உயர்த்தப்படும். அதன்பிறகு, படிப்படியாக அனைத்து ரயில்களிலும் அந்த வகை கழிப்பறைகள் அமைக்கப்படும். ரயில்களில் உள்ள மொத்தம் 2.5 லட்சம் கழிப்பறைகளையும் தரம் உயர்த்த முடியும். மே 31-ம் தேதி நிலவரப்படி, ரயில்களில் 37,411 ரயில் பெட்டிகளில் 1,36,965 பயோ கழிப்பறைகள் பொருத்தப்பட்டுள்ளன. தலா ஒரு கழிப்பறையை அமைக்க சுமார் ரூ.ஒரு லட்சம் செலவாகின்றது.

அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் அனைத்து ரயில்களிலும் பயோ கழிப்பறைகள் பொருத்தப்பட்டு விடும். இதற்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பயோ கழிப்பறைகளை மேம்படுத்த தலா ஒரு கழிப்பறைக்கு ரூ.2.5 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ரயில்வே துறையும் பயணிகள் முழு மனநிறைவுடன் பயணிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து