முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உச்சிப்புளியில் பயணிகள் விமானநிலையம் அமைக்க மத்திய மந்திரியிடம் அமைச்சர் மணிகண்டன் கோரிக்கை

வியாழக்கிழமை, 21 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- உச்சிப்புளியில் பயணிகள் விமானநிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து மந்திரியிடம் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் நேரில் கோரிக்கை மனு அளித்தார். வளர்ந்துவரும் ராமநாதபுரம் மாவட்டத்தின் நீண்டகால கோரிக்கையான மருத்துவகல்லூரி மற்றும் பயணிகள் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதுதான். இதற்காக மாவட்ட அமைச்சர் டாக்டர் மணிகண்டன் நடவடிக்கை எடுத்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் முதல்கட்டமாக மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்காக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதன் அடுத்தகட்டமாக உச்சிப்புளியில் உள்ள கடற்படை விமான நிலையத்தினை பயணிகள் விமான நிலையமாக மாற்றுவதற்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவ ருகிறது. இதன்படி உச்சிப்புளி கடற்படை விமான தளம் தற்போது ஆயிரம் அடியாக உள்ள ஓடுதளத்தினை விரிவாக்கம் செய்து 8 ஆயிரம் அடி நீளத்தில் விமான ஓடுதளம் அமைத்து பயணிகள் விமான நிலையமாக மாற்ற பரீசிலிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் வளர்ந்து வரும் மாவட்டங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ்பிரபுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். இதனை பெற்றுக்கொண்ட மத்திய மந்திரி புண்ணிய தலங்கள் நிறைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு பயணிகள் விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அப்போது பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உடன் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து