முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேர்மறையான மாற்றத்தை கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி பிரதமர் மோடி பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: பொருளாதாரம் மற்றும் நிதி செயல்பாடுகளில் ஜி.எஸ்.டி. நேர்மறையான மாற்றத்தை கொண்டுவந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லியில் வர்த்தகத் துறைக்கு என வானிஜ்யா பவன் எனும் புதிய அலுவலகம் இந்தியா கேட் அருகில் அமைக்கப்படவுள்ளது. இது 4.33 ஏக்கர் நிலத்தில் ரூபாய் 226 கோடி ரூபாய் செலவில் 1000 அதிகாரிகள் வரை இடம்பெறும் வகையில் கட்டப்படவுள்ளது. இந்த அலுவலகத்தில் தாள்களே பயன்படுத்தாது முழுவதும் தொழில்நுட்பம் முறையில் செயல்படும் வகையில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக நிறைய மரங்களை அழிக்காமல் இருப்பதற்காக இந்த கட்டிடத்தின் கட்டமைப்பு பசுமை தரத்தில் உள்ளது. அரசு பணிகளிலும் இதுபோன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம் என்பதை உணர்த்தும் வகையிலும் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது என்பதை குறிக்கும் வகையிலும் அமைக்க திட்டமடப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற மோடி பேசியதாவது, வானிஜ்யா பவன் அலுவலகத்தை கட்டும் பணி டிசம்பர் 2019-க்குள் நிறைவடையும் என்று நம்புகிறேன். தொழில்நுட்பங்கள் வர்த்தகத்தை எளிதில் செய்வதற்கு வழிவகுத்து விட்டது. வரும் ஆண்டுகளில் இது மேலும் வளர்ச்சி அடையும். பொருளாதாரம் மற்றும் நிதி செயல்பாடுகளில் ஜி.எஸ்.டி. நேர்மறையான மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து