முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தை முடக்குவதா? மக்கள் கண்காணித்து கொண்டு இருப்பதை எம்.பி.க்கள் உணர வேண்டும்: சுமித்ரா மகாஜன்

சனிக்கிழமை, 23 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: பாராளுமன்றம் அடிக்கடி முடக்கப்படுவதை மக்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும், தேர்தல் சமயத்தில் தக்க முடிவு எடுப்பார்கள் என்பதையும் எம்.பி.க்கள் உணர வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், மக்களவை தலைவர்  சுமித்ரா மகாஜன் பேசியதாவது,
எம்.பி.க்களுக்கான விதிமுறை கையேடு அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அமளி காரணமாக அவை ஒத்தி வைக்கப்படும்போது என் மனம் பாதிக்கப்படுவதுடன், மிகுந்த வேதனை அடைகிறேன். பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்தி செல்வதில் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பொறுப்பு உண்டு. ஒரு விஷயத்தை ஆலோசித்து, விவாதித்து, முடிவு எடுக்க வேண்டிய இடம் பாராளுமன்றம். ஆனால், அமளிகளால் என்ன நடந்து விடுகிறது?

மக்கள் தங்களை கண்காணித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை எம்.பி.க்கள் உணர வேண்டும். மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு உரிய முடிவை எடுப்பார்கள். பாராளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களையும், நல்ல பேச்சுகளையும் புறந்தள்ளிவிட்டு, அமளி குறித்து மட்டுமே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன என்று தெரிவித்தார் மகாஜன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து