சிவகார்த்திகேயனின் புதிய படம்

வியாழக்கிழமை, 28 ஜூன் 2018      சினிமா
sivakarthikeyan newfilm 2018 6 28

இன்று நேற்று நாளை’ படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணையும் தனது அடுத்தப் படத்துக்கான படப்பிடிப்பு வேலையில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் இயக்குநர் ரவிக்குமார். அறிவியல் பின்னணியிலான இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரித் சிங் நடிக்கிறார். காமெடிக்கு யோகிபாபு.

இப்படம் குறித்து இயக்குநர் ரவிக்குமார் கூறியிருப்பதாவது: ’’முதல் படம் கொடுத்து 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த நாட்களில் நிறைய அனுபவங்கள். இப்போது 2-வது படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளேன். தொடர்ந்து அன்பும், ஆதரவும் அளித்து வரும் எல்லோருக்கும் நன்றி’’ என்று இயக்குநர் ரவிக்குமார் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப்படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். மேலும், ’நரசிம்மா’ படத்தில் நடித்த இஷா கோபிகர் இப்படம் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து