நெடுஞ்சாலை சுங்க கட்டண வசூல் தொடரும்

புதன்கிழமை, 4 ஜூலை 2018      வர்த்தகம்
Highway

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய  மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை நிதின் கட்காரி, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூல் செய்வது ஒருபோதும் நிறுத்தப்படாது. சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டே தீரும். நீங்கள் நல்ல சேவைகளை விரும்பினால், அதற்கான தொகையை செலுத்தத்தான் வேண்டும் என கூறியுள்ளார். 

கடந்த 2017-ம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 60 ஆயிரம் விபத்துகள் நேரிட்டதாகவும், அவற்றில் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் பலியானதாகவும் சுட்டிக்காட்டிய நிதின் கட்காரி, நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய என்னுடைய அமைச்சகம் செயல்படுகிறது என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து