கைலாஷ் ரத யாத்திரைக்கு செல்லும் வழியில் இறந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உடல் ஆண்டிபட்டி வந்தது. உறவினர்கள் கதறல்.

வெள்ளிக்கிழமை, 6 ஜூலை 2018      தேனி
andippati news 6

 ஆண்டிபட்டி - தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி 5 வார்டில் வசிப்பவர் ராமச்சந்திரன் (69). இவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நாகரத்தினம் (71) ஆசிரியர் தொடக்க கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு வெங்கடேசன் நரசிம்ம பாண்டியன் (42) மகனும்  ஜெயஸ்ரீ பத்துமா (35) என்ற மகளும் உள்ளனர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி நாகரத்தினம் ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்மீக ரத யாத்திரை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 18ம் தேதி இப்பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (65) அவரது மனைவி மெய்யம்மை (62), சிவக்குமார் (52) மனைவி நீலோத் பாலாம்மாள் (45) ஆகியோர்களுடன்  இணைந்து இமய மலையில் உள்ள கைலாஷ் சுவாமியை தரிசனம் செய்ய ஆன்மீக பயணத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் ராமச்சந்திரன் நேபாளம் எல்லை அருகே உள்ள பகுதியில் யாத்திரீகளுடன் செல்லும் போது கடந்த 2ம் தேதி ராமச்சந்திரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடன் சென்றவர்கள் முதலுதவி அளித்தும் பயனின்றி இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து தூதரகத்தின் மூலமாக உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் உடலை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டதால், ஆண்டிபட்டியில் உள்ள அவரது மருமகள் சரணியா என்பவர் எனது மாமனாரின் உடலை மீட்டுத்தருமாறு தேனி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார். இதனடிப்படையில் மத்திய - மாநில அரசுகளின் உதவியுடன் இறந்த ராமச்சந்திரனின் உடல் கடந்த 3ம் தேதி  காத்து மண்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உடலை உறவினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அங்கிருந்து விமான மூலமாக டெல்லி கொண்டு வரப்பட்டு, சென்னைக்கு விமானம் மூலமாக உடலை அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து உடலை சென்னையிலிருந்து அமரர் ஊர்தி மூலமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு  கொண்டு வந்தனர். அவரது உடலை கண்டு  உறவினர்களும், பொதுமக்களும் கதறி அழுதனர்.
       இதனையடுத்து தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்தீபன், அ.ம.மு.க. கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் ஆகியோர் ராமச்சந்திரன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி , குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.
      இதனையடுத்து ஆண்டிபட்டியில் உள்ள மயானத்தில் ராமச்சந்திரனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
      இது குறித்து இறந்த ராமச்சந்திரனின் மகன் வெங்கடேசன் கூறியதாவது. எனது பெற்றோர் கைலாஷ் மானசரோவர் பனி லிங்கத்தை தரிசிக்க யாத்திரையாக சென்றனர். அப்போது உடல் நலக்குறைவு காரணமாக எனது தந்தை திபெத்தை அடுத்த தார்ஜன்ட்டில் உயிரிழந்தார்.இதனையடுத்து சீன தூதரகம் மூலம் பெங்களுரில் உள்ள எனது சகோதரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. அவர் மூலமாக எனக்கு தகவல் கிடைத்தது. உடன் நான் பெங்களூரு சென்று குடும்பத்துடன் கல்கத்தா சென்று, அங்கிருந்து நேபாளம் தலைநகர் காத்மாண்டுக்கு சென்றோம். சீன அரசின் தூதரகம் மூலம் திபெத்தில் எனது தந்தையின் உடலில் இருந்த நீரை வெளியேற்றி, பதப்படுத்தி காத்மாண்டுக்கு அனுப்பினர். அங்கு உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு உடல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய தூதரகம் மூலம் டெல்லிக்கு விமானம் மூலம் உடல் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சென்னை வந்து , தற்போது சொந்த ஊரான ஆண்டிட்டிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மிகவும் சோகமயமான சூழலில் எனது தந்தையின் உடலுடன் வந்தது நெஞ்சை கசக்கி பிழிந்து விட்டது. இந்த நிலை வேறு யாருக்கும் ஏற்பட கூடாது. இருப்பினும் விரைந்து செயல்பட்டு உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அனைத்து உதவிகளையும் செய்த மத்திய, மாநில அரசுகளுக்கும், தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து