முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளாட்பார மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தும் "கபிலவஸ்து "

சனிக்கிழமை, 7 ஜூலை 2018      சினிமா
Image Unavailable

பிளாட்பார மக்களின் அன்றாட வாழ்க்கையை அவர்கள் படும் துன்பங்களை மையப்படுத்தி எடுக்க பட்ட படம் தான் கபிலவஸ்து.

நடிகை ஐஸ்வர்யா நாயகியாக நடிக்கிறார் படத்தின் இயக்குனர் நேசம் முரளி நாயகனாக நடிக்கிறார் அதில் நந்தினி, மன்சூர் அலிகான், கோவை செந்தில், மீராகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இசை ஸ்ரீகாந்த் தேவா, ஒளிபதிவு விஜி, திரைகதை , இயக்கம், தயாரிப்பு- நேசம் முரளி.

திரைபடத்தின் இயக்குனர் நேசம் முரளி கூறியாதாவது:-

நம் தேசத்தின் மக்கள் தொகை 125 கோடியை எட்டிப்பிடித்திருக்கும் காஷ்மீர் முதல் குமரி வரை அனைவருக்கும் தெரிந்த ஒரு காட்சியை உள்ளடக்கியதே .அதே தெருவோரங்களில், சாலை ஒரங்களில் உண்டு, உறங்கி மடிந்து போகும் மனிதர்களை பற்றியது.அவர்களோ சாமானியர்கள் ,ஏழைகள், அகதிகள் என்று கோடிக்கும் அதிகமான இந்திய குடிமக்கள், ஆனால் சொந்த நாட்டிலேயே பல்லாண்டுகளாக அகதிகளாக வாழ்ந்து எந்த கணக்கெடுப்புக்கும் அடங்காமல் அனுதினமும் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றனர். உணவு, இருப்பிடம், தண்ணீர், என்ற அடிப்படை வசதிகளும், சட்டங்களுக்கு கிடையாது. இத்தனைக்கும் அவர்கள் தவறு செய்வதற்காக பிற்ந்தவர்கள் அல்ல, தவறாமல் - தவறிப்பிறந்தவரகள் ஆவார்கள். இந்த படத்தில் ஒரு உண்மையின் ஒரு துளியே படம் ஆகும்.

படத்தில் நடிகை ஐஸ்வர்யா அருமையாக நடித்துள்ளார். பொதுமக்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். எல்ல நிகழ்வுகளையும் படத்தில் காட்சியாக அமைத்துள்ளேன். பொதுமக்கள் இப்படத்தை ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வருங்காலத்தில் அகதிகள் இல்லாத நாடக உருவாக வேண்டும் என்னுடைய நோக்கமாகும் . இந்த படத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவ்வாறு நேசம் முரளி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து