பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்காக ஆர்.பி.ஐ. செய்த செலவு எவ்வளவு ?

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      வர்த்தகம்
RBI 2017 10 21

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து புதிதாக அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இந்திய விமானப்படை விமானம் மூலம் நாடு முழுவதும் கொண்டு சேர்க்கப்பட்டன. இதற்காக விமானப்படைக்கு ரிசர்வ் வங்கி செலுத்திய கட்டணம் தொடர்பான விவரங்களை ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார்.

அதில் ரூபாய் நோட்டுகளை கொண்டு சேர்க்க ரிசர்வ் வங்கி மற்றும் பணம் அச்சடிக்கும் கழகத்துக்கு 29 கோடியே 41 லட்சம் ரூபாயை கட்டணமாக இந்திய விமானப்படை நிர்ணயித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணமதிப்பிழப்புக்குப் பிறகு 2016-ல் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி 7 ஆயிரத்து 965 கோடி ரூபாயை செலவழித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து