சைரஸ் மிஸ்திரியின் வழக்கு தள்ளுபடி

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      வர்த்தகம்
tata steel

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் சைரஸ் மிஸ்திரி அப்பதவியிலிருந்து கடந்த 2016-ம் ஆண்டு அதிரடியாக நீக்கப்பட்டார். பதவி நீக்கத்திற்குப் பிறகு, டாடா குழுமத்திற்கும் மிஸ்திரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு சட்டப் போராட்டம் தொடங்கியது.

பதவி நீக்கத்திற்கு எதிராக சைரஸ் மிஸ்திரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டுள்ளது. டாடா குழுமம் மற்றும் அதன் உறுப்பினர்களின் நம்பிக்கையை மிஸ்திரி இழந்ததால் அவர் நீக்கப்பட்டதாகவும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து