முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

U19 கிரிக்கெட் போட்டி: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜூன் டெண்டுல்கர் டக்அவுட்

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு : 19 வயதிற்கு உட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக அர்ஜூன் டெண்டுல்கர் 11 பந்துகள் சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
1 விக்கெட் எடுத்தார்

19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணி இலங்கையில் சுற்றப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இதில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் அறிமுகமானார். டாஸ் வென்று இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சால் இலங்கை அணி 244 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அர்ஜூன் டெண்டுல்கர் 11 ஓவர்கள் வீசி 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

டக்அவுட்...

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் குவித்திருந்தது. வதேரா 81 ரன்களுடனும், படோனி 107 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வதோரா மேலும் ஒரு ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹர்ஷ் தியாகி 15 ரன்னில் வெளியேறினார். 8-வது விக்கெட்டாக அர்ஜூன் டெண்டுல்கர் களம் இறங்கினார். இவர் 11 ரன்களை சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அறிமுக போட்டியில் ரன் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். படோனி 185 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க 134.5 ஓவரில் 589 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து