டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் சாதிப்பார் - ராகுல் டிராவிட் நம்பிக்கை

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      விளையாட்டு
Rishabh pant - Dravid 2018 7 23

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் சாதிப்பார் என்று இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவருக்கு வாய்ப்பு...

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. 2-1 என டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, ஒரு நாள் தொடரை 1-2 என  இழந்தது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-cd தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சகா இடம்பெறாததால் ரிஷப் பந்த்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய ‘ஏ’ அணியில் இடம் பெற்றுள்ள ரிஷப், இங்கிலாந்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான முத்தரப்பு தொடரிலும் அங்கீகாரமில்லாத டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக விளையாடியதை அடுத்து அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

9 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், இப்போது இந்திய ‘ஏ’ அணி பயிற்சியாளராக இருக்கிறார். இந்திய அணியின் சுவர் எனப் போற்றப்படும் அவருக்கு, இரண்டு அணிகளிலும் ரிஷப்பின் பேட்டிங்கை மேம்படுத்திய சிறப்பு உண்டு. இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் மாறுபட்ட பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி ரிஷப் பந்த் சாதிப்பார் என்று டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிறப்பானவர்...

இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘ரிஷப் பந்த் வித்தியாசமாக பேட்டிங் செய்வதில் சிறப்பானவர். அதுபோன்று விளையாடும் திறமை அவரிடம் இருக்கிறது. அது முற்றிலும் மாறுபட்டவை. அவர் எப்போதும் அட்டாகிங் பேட்ஸ்மேன்தான். நிலைமையை கணித்து விளையாடுபவர். அவர் எப்போதும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். ஆனால் ரெட் பந்து (Red Ball) போட்டியில் சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்றபடி விளையாடக்கூடியவர்.
64 ரன்கள்...
வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேஸிங் செய்யும்போது ஜெயந்த் யாதவுடன் அவர் இணைந்து எடுத்த 100 ரன் பார்ட்னர்ஷிப் அபாரம். முத்தரப்பு ஒரு நாள் தொடரின் கடைசிப் போட்டியில் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் முக்கியமான கட்டத்தில் நிலைமையை அறிந்து அவுட் ஆகாமல் எடுத்த 64 ரன்கள் சேர்த்தார். அவர் எப்படி விளையாடுவார் என்பது எல்லோரும் தெரியும். ஐபிஎல் தொடரில் அதிரடியாகவே செயல்பட்டார். கடந்த ரஞ்சி தொடரில், அதிரடியான ஆட்டம் மூலம் 900 க்கும் அதிகமான ரன்களை எடுத்தார். அதனால் அவர் கண்டிப்பாக சாதிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’’ என்றார்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து