முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்பு நிலை மற்றும் விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறை குறித்து விழிப்புணர்வு பயிற்சி

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2018      தேனி
Image Unavailable

  தேனி ,- தேனி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்; பாதுகாப்பு நிலை மற்றும் விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறை குறித்து அனைத்துப்பிரிவு பணியாளர்களுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.கந்தசாமி  தலைமையில் நடைபெற்றது.
   சமூகத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய பேரிடர்களின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் திட்டமிட்டு விரைவான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள பேரிடர் மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 360 அலுவலர்கள் பணிபுரிவதுடன் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு துறை சார்ந்த பணிகளுக்காகவும், கோரிக்கைகளுக்காகவும் வந்து செல்கின்றனர். இவ்வாறாக அலுவலகத்திற்கு வந்து செல்லும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பினை உறுதி செய்வதுடன் திட்டமிட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் ஒவ்வொரு தளத்திலும் பேரிடர் பாதுகாப்பு நிலையினை உருவாக்கிட வேண்டும்.
   பணியிடங்களில் இடர் வாய்ப்புள்ள இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பு விதிமுறைகள்  நடைமுறைப்படுத்த வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து அறிவிப்பு பலகைகள் அமைத்திட வேண்டும். மின் கசிவு மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் தீ விபத்து, பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகளை முன்னிலை படுத்துவதற்காக, கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தீக்குளித்தல், மின்தடை காரணமாக தானியங்கி ஏணி (டுகைவ) இயந்திரம் இயங்காமல் நின்று விடுதல், நிலநடுக்கம், இயற்கை பேரிடர் போன்ற சூழ்நிலைகளின் போது ஒவ்வொரு பணியாளரும் பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குவதற்கு முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவதுடன், தொடர்ந்து தங்களின் பங்களிப்பினை வழங்குவதன் மூலம் மட்டுமே பாதிப்பில்லா சூழ்நிலையை ஏற்படுத்திட முடியும்.
அலுவலக வளாகத்தில் 80 இடங்களில் தீயணைப்புக்கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. 16 இடங்களில் கண்காணிப்புக்கேமராக்கள் (ஊஊவுஏ) பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. தீ விபத்தினை அறிவிக்கும் ஒலிப்பான் (ர்ழசn) தரைத்தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்தின் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு மூலைகளில் தண்ணீர் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. முதலுதவி பெட்டி வருவாய் பொதுப்பிரிவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தீ விபத்தின் போது ஏற்படும் அவசர சூழ்நிலை, தீயணைப்புக்கருவி பயன்படுத்துவது குறித்து அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் நிர்வாகம் வகுத்துள்ள பாதுகாப்பு கொள்கைகளையும், பாதுகாப்பான செயல்பாடுகளையும் முறையாக கடைபிடித்தல் வேண்டும். தற்காப்பு நடவடிக்கைகளுடன், பிற பணியாளர்களின் நலனையும் ஒட்டுமொத்த அலுவலக நலனையும் கருத்தில் கொண்டு பொறுப்பறிந்து நடந்து கொள்ளுதல் மிகவும் அவசியமாகும். அலுவலக வளாகத்தில் தீங்கு விளைவிக்கக்கூடிய நிகழ்வுகள், அபாயகரமான செயல்பாடுகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக உரிய அலுவலர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, மருத்துவத்துறை சார்ந்த தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அனைத்துப்பணியாளர்களும் ஒருங்கிணைந்து தன்னலமற்று சிறப்பான முறையில் பணியாற்றுவதுடன், இயற்கை பேரிடர்களிடமிருந்து எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாத்திடலாம் என இப்பயிற்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இப்பயிற்சி கூட்டத்தில், மின்சாதன பயன்பாடு, இயற்கை பேரிடர் முதலுதவி மருத்துவ சேவை பயன்பாடு, தீயணைப்புக்கருவி பயன்படுத்துவது, பல்வேறு சூழ்நிலைகளில் பொதுமக்களை பாதுகாப்பான முறையில் மீட்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலர் க.தென்னரசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கே.ஜெயலட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.அபிதாஹனீப், அலுவலக மேலாளர் (ஊரக வளர்ச்சி) கருப்பசாமி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் கா.சந்திரசேகரன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து