முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பர்மிங்காம் முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள்

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

பர்மிங்காம் : பர்மிங்காம் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நேற்று மதிய உணவு இடைவேளை வரை
1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.

பேட்டிங் தேர்வு

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது .  இதில் முதல்டெஸ்ட் போட்டி  பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நேற்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணி:

அலைஸ்டர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட், மலன், பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், பட்லர், சாம் குர்ரான், அடில் ரஸித், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இந்திய அணி:

முரளி விஜய், தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி, ரகானே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, அஸ்வின்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் புஜாரா நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக பணிபுரிகிறார். அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 6 ஓவர் முடிந்த நிலையிலேயே அஸ்வின் பந்து வீச அழைக்கப்பட்டார். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. 9-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் அலஸ்டைர் குக் க்ளீன் போல்டானார். அவர் 13 ரன்கள் சேர்த்தார்.

83 ரன்கள்...

அடுத்து ஜென்னிங்ஸ் உடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய பந்து வீச்சாளர்களால் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 28 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. ஜென்னிங்ஸ் 38 ரன்னுடனும், ஜோ ரூட் 31 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து