முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

"அண்ணனுக்கு ஜே" படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சி நடிகர் தினேஷ்

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2018      சினிமா
Image Unavailable

"அண்ணனுக்கு ஜே" திரைப்படம் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் , பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.இப்படத்தினை அறிமுக இயக்குனரான ராஜ்குமார் இயக்கியுள்ளார் .இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.இந்தப்படத்தில் கதநாயகனாக தினேஷ் நடித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.மேலும் ராதாரவி ,மயில் சாமி ஆகியோ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அர்ரோல் கொரளி இசை அமைத்துள்ளார்.விஷ்ணு ரங்கசாமி அறிமுக ஒளிப்பதிவாளராக இப்படத்தில் அறிமுகமாகி உள்ளார்.எடிட்டிங் G .B வெங்கடேஷ் செய்துள்ளார்.

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. நடிகர் ‘அட்டகத்தி’ தினேஷ் அளித்த பேட்டி வருமாறு:- "இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.இயக்குனர் ராஜ்குமார்க்கும் வெற்றிமாறன்0க்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மஹிமா அருமையாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் அர்ரோல் 7 பாடல்கள் நன்றாக இசையமைத்துள்ளார் .ராதா ரவி அவர்களுடன் நடித்தது மிக்க சந்தோசமாக உள்ளது. அரசியலே தெரியாமல் காதலித்துக் கொண்டு வெட்டியாக சுற்றிக்கொண்டிருக்கும் ஒருவன், ஒரு துரோகத்திற்கு பிறகு அரசியலுக்குள் நுழைந்து அரசியல்வாதியாகிறான் என்பதே படம். படத்தில் ஒரு தேசிய கட்சி, மாநில கட்சி இரண்டுக்குமான போட்டியாக இருக்கும். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் " இவ்வாறு பேசினார் .

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து