இந்தோனேசியாவை தொடர்ந்து அந்தமானில் நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018      உலகம்
earthquake

நிக்கோபார் : அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடுமையான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

நேற்று முன்தினம் மாலை இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது. இதனால் மொத்தம் 82 பேர் பலியாகினர். இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.3 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. ஆனால் எந்த விதமான கட்டிட இடிபாடும் இதனால் ஏற்படவில்லை. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. உயிரிழப்பும் இதனால் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து