கலீதா ஜியாவுக்கு 6 மாத இடைக்கால ஜாமீன்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      உலகம்
khaleda-zia 2018 8 7

டாக்கா : தீவைப்பு வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 6 மாத இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக, கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி  கூட்டணி கடந்த 2015-ம் ஆண்டு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது நடத்தப்பட்ட வன்முறை, பேருந்து தீவைப்புச் சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, கலீதா மீது நடைபெற்ற வழக்கில் அவருக்கு 6 மாத ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.எம் .அஸாதுஸமான் மற்றும் எம்.எஸ். முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் உத்தரவிட்டனர். ஏற்கெனவே, அறக்கட்டளை ஊழல் வழக்கில் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து